தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற இருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் புதன்கிழமை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
undefined
100 வயதில் காலமான ஹென்றி கிஸ்ஸிங்கர்! இந்தியர்கள் பற்றி சொன்ன 'அந்த' வார்த்தை என்ன தெரியுமா?
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, எழும்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.
இச்சூழலில் சென்னை வானிலை ஆயு்வு மையம் இரவு 10 பத்து மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என்று கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிக மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் உதவி தேவைப்படுவோர் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D