இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும்? - மத்திய அரசு அவசர ஆலோசனை!!

First Published Aug 18, 2017, 4:02 PM IST
Highlights
central government discussion attorney general


நீட் தேர்வு எழுதிய மாணவர்களும், மாநில திட்டத்தில்  படித்த மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் எப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து  அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓர்  ஆண்டு  விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்திருந்தது. 

இந்த  அவசர சட்ட முன்வரைவு   குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. 

அப்போது,  தமிழக  அரசின்  அவசர  சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கலாம் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து இந்த சட்டத்திற்கு மத்திய அரசின் 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன. 

இந்நிலையில் நீட் தேர்வு அவசர சட்டத்திற்கு தடை விதிக்க  வேண்டும் என உச்சநீதிமன்றத்தில்  மாணவர்கள் சார்பில்  நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால்  உச்சநீதிமன்றம்  அதற்கு  மறுப்பு தெரிவித்ததுடன், நீட் அவசர சட்டத்தால், எந்த மாணவரும் பாதிக்காத வகையில், பார்த்து கொள்ள வேண்டும் எனக்கூறியிருந்தது. 

அதாவது நீட் தேர்வு எழுதியவர்களும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களும்,  பாதிக்கப்படாமல்  மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் திட்டம் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால்  கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் , இரு தரப்பினரும்  பாதிக்காமல் எப்படி மாணவர் சேர்க்கை  நடத்த முடியும்  என்பது குறித்து விளக்கம்  அளிக்க வேண்டும், என அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இதனால்  நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

click me!