சாலை விதிகளை மதிக்காமல் பைக்கில் பறந்த TTF வாசன்... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!!

By Narendran SFirst Published Sep 20, 2022, 10:23 PM IST
Highlights

சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக பைக் ஓட்டிய யூடியூபர் TTF வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக பைக் ஓட்டிய யூடியூபர் TTF வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூடியூப் சேனலில் பைக்குகளில் வேகமாக போவதையும் சாகசங்கள் செய்வதையும் பதிவிட்டு பிரபலமானவர் Twin throttlers யூடியூப் சேனலை நடத்தி வரும் கோவையை சேர்ந்த வாசன். இவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்போது கூடிய கூட்டத்தை கண்டு இணையத்தில் வாசனை பலர் விமர்சனம் செய்தனர்.

இதையும் படிங்க: மரண பயத்தில் ஜி.பி.முத்து… பைக்கில் பறக்கும் TTF வாசன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

மேலும் இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபமாக பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றார். அப்போது ஜி.பி.முத்து பயத்தில் அலறினார். இருந்த போதும் லாரி உள்ளிட்ட வாகனங்களை வேகமாக ஓவர்டேக் செய்தார் வாசன்.

இதையும் படிங்க: தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசு விசாரணை அறிக்கை ஏற்பு; வழக்குகள் முடித்து வைப்பு!!

இந்த பயணத்தின் போது வாசன் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில் அவருக்கு பின் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் இருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் சாலை பின்னால் ஒருவரை அமரவைத்து அவருக்கும் ஹெல்மெட் அணிவிக்காமல் இவ்வளவு வேகமாக சென்ற வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் TTF வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!