திருப்பூருக்கு செல்லும் பேருந்துகள் திடீர் ரத்து; அவதிப்பட்ட பயணிகள் மீண்டும் இயக்கக்கோரி சாலை மறியல்…

 
Published : Sep 14, 2017, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
திருப்பூருக்கு செல்லும் பேருந்துகள் திடீர் ரத்து; அவதிப்பட்ட பயணிகள் மீண்டும் இயக்கக்கோரி சாலை மறியல்…

சுருக்கம்

Buses to Tirupur suddenly canceled Passengers traveling back to the road traffic ...

ஈரோடு

புன்செய் புளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு செல்லும் பேருந்துகள் திடிரென ரத்து செய்யப்பட்டதால் அவதிப்பட்ட பயணிகள் மீண்டும் பேருந்துகளை இயக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், புன்செய் புளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு தினமும் அரசுப் பேருந்துகளில் செல்வதுதான் வழக்கம்.

இந்த நிலையில், திருப்பூருக்குச் செல்லும் மூன்று பேருந்துகள் வேறு வழித்தடத்தில் மாற்றி இயக்கப்பட்டதால் தனியார் பேருந்துகளை பயணிகள் நாடி சென்றனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் அதில் பயணிக்க முயவில்லை.

இதனால் திருப்பூருக்கு வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து, திருப்பூருக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி புன்செய் புளியம்பட்டி - திருப்பூர் சாலை, டானாபுதூரில் சாலையில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர், இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பயணிகள் அங்கிருந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் .. ஸ்டாலின் .. விஜய் ... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!