அவனே டிக்கெட் வாங்கிட்டான், உனக்கெதுக்கையா டிக்கெட்! நடுவழியில் சடலத்தை இறக்கி விட்டு சென்ற கொடுமை....

First Published Jan 11, 2018, 10:37 AM IST
Highlights
Bus conductor In the middle of the dead


பெங்களுருவிலிருந்து  திருக்கோவிலூர்  சென்ற அரசு  பேருந்தில்  கட்டிட தொழிலாளிகள் இருவர் ஏறியுள்ளனர். திருக்கோவிலூர்  செல்ல இருவருக்கும் பயணக் கட்டணம்  ரூ.300க்கு பயணச் சீட்டு  புதிய  நடத்துனர்  வழங்கியுள்ளார். சூளகிரி  அருகே வரும் போது  இருவரில்  ஒருவர் உடல் நிலை சரியில்லாததால்  இறந்து விடுகிறார். 

இதையறிந்த நடத்துனர்  பேருந்தை நிறுத்தி  இறந்தவரையும், உடன்  வந்தவரையும்  சூளகிரி  புறவழிச்சாலையில்  இறக்கி  விட்டு  பயணச் சீட்டையும்  வாங்கிக் கொண்டு  சென்றுள்ளார். இறங்கிய பயணி பயணச் சீட்டை தர மறுக்கவே, மனுசனே  டிக்கெட்  வாங்கிட்டான், உனக்கெதுக்கையா  டிக்கெட் என  நக்கலடித்து பயணச் சீட்டை  பறித்துச்  சென்றார். தற்போது  உடன் வந்தவர் உடலை திருக்கோவிலூர் எடுத்துச் செல்வது எப்படி என விழித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதாபிமானமற்ற செயலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் ஒன்று பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்சிங் லோதி, தாமோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காகப் பிறந்து ஐந்து நாளே ஆன கைக்குழந்தையையும் தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே மனைவி மல்லி பாயின் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயர சம்பவத்தைப் பொருட்படுத்தாமல் பேருந்தின் நடத்துநர், சடலத்துடன் ராம்சிங்கையும் குழந்தையையும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றார்.

நடத்துனர்களின் இந்துபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை தினம் தினம் அரன்கேற்றிகொண்டுதான் இருக்கிரார்கள்.

click me!