"பொதுமக்களுடன் எங்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதா?" - வங்கி ஊழியர் சங்கம் காட்டமான கேள்வி

First Published Dec 2, 2016, 10:55 AM IST
Highlights


தினம் ஒரு அறிவிப்பால் பொதுமக்களுடன் மோதல் ஏற்படுகிறது. வங்கிகளை சூறையாடுகிறார் கள். எனவே திட்டவட்டமான கொள்கை முடிவு எடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் பிற வங்கி அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

இந்தியாவையே பணம் இல்லா தேசம் ஆக்கப் போவதாக கூறிக்கொண்டு ரூ.500, 1000 நோட்டுகளுக்கு தடை விதித்து விட்டு புதிய ரூ-.2000, 500 நோட்டுகளை புழக்கத்தில் விடப் போவதாக பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார்.

 அதோடு வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தார். தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினர். பிள்ளைகளின் திருமணத் துக்கும் பெற்றோர்கள் மரணம் அடைந்தால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கும் கூட பணம் எடுக்க முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகிறார்கள். 

இந்த அவதிகளை 50 நாள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு ஒளிமயமாக எதிர் காலம் வரும் என்றும் பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வரும் நிலை யில், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வங்கிகள் தாக்கப்படுகின்றன. 

ஏடிஎம்கள் சூறையாடப்படுகின்றன. வங்கி ஊழியர்களை உள்ளேயே வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டத் தில் குதித்துள்ளனர். மக்களை அவதிப்பட வைத்துள்ள இந்த முடிவால் நியாயம் வேண்டி நீதி மன்றங்களில் பலரும் பொதுநல வழக்கு தொடர்ந் துள்ளனர். உடனடியாக தீர்வு காணும்படி நீதிபதிகள் உத்தரவிட்டும், சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியிடம் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், ரூபாய் தடை விவகாரத்தில் தெளிவான முடிவு எடுங்கள். குழப்பமான  அறிவிப்புகளால் மக்களிடம் இருந்து தினமும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி உள்ளது. எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. அஞ்சி அஞ்சி பணிபுரிய வேண்டியநிலையில் இருக்கிறோம். சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது  சுற்றறிக்கை வெளியிடுவதும், நிபந்தனைகள் வெளியிடுவதும் எங்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. 

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் தீர்வு ஏற்படுவதற்குப் பதிலாக குழப்பம் தான் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நாங்கள் பகையாளிகள் ஆக்கப்பட்டிருக்கிறோம்.  எனவே ரூபாய் தடை விவகாரத்தில் என்ன தான் கொள்கை வகுத்து இருக்கிறீர்கள்? உத்தரவுகளில் ஒளிவுமறைவற்ற தன்மை இல்லை. எனவே விரிவான விளக்கத்தை தரும்படி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு  வங்கி 

ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச் சலம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் பல்வேறு எதிர்ப்புகளால் பதட்டத்தில் பணி புரிய வேண்டி இருப்பதால் வங்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்படி வங்கியாளர் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!