
பெப்சி, கோக் கொண்டு வரக்கூடாது…படப்புடிப்புத் தளத்தில் தடை விதித்த இயக்குநர்…
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டம் வரலாறு கானாத அளவுக்கு வெற்றி பெற்றது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கும் போராட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர்.
முக்கியமாக விவசாயிகள் பிரச்சனை, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் போன்ற பிரச்சனைகளுக்காகவும் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களது இந்த கோரிக்கையால் தமிழகத்தில் பெப்சி மற்றும் கோக் விற்பனை வெகுவாக சரிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சனை பெப்சி, கோக் மீதான அதிருப்தியையும் கிளறிவிட்டுள்ளது.
பல உணவங்களில் பெப்சி, கோக்குக்கு தடை விதித்திருக்கிறார்கள். வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் விற்பதில்லை என்று வணிகர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனது படப்பிடிப்புதளத்திலும் பெப்சி, கோக்குக்கு தடை விதித்துள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
கத்தி படத்தின் கதை எழுதத் தொடங்கியதில் இருந்தே பெப்சி மற்றும் கோக் இரண்டையும் குடிப்பதை நிறுத்திவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது தன்னுடைய படப்பிடிப்பு தளத்திலும் பேப்சி,கோக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்