
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று இரவு 12 மணி முதல் செல்லாது என அரசு அறிவித்தது.
கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வைத்துள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் ஒரு படிவம் தரப்படும்.
இதனைக்கொண்டு நீங்கள் எத்தனை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றபோகிறீர்களோ அதனை அந்த படிவத்தில் நிறைவு செய்து, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பணத்தை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம்.