சினிமா பானியில் அதிரடி சோதனை; ரூ.5 இலட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது…

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 02:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
சினிமா பானியில் அதிரடி சோதனை; ரூ.5 இலட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது…

சுருக்கம்

இராமநாதபுரம்,

இராமநாதபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சினிமா பானியில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.5 இலட்சம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் இளைஞர் பிடிபட்டார்.

சுங்கத்துறை அதிகாரிகளிக்கு இரகசியமாக தகவல் ஒன்று கிடைத்தது. இராமநாதபுரம் நகரில் இருக்கும் கடைகளில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது, பல்வேறு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருக்கின்றனர் என்ற தகவல்தான் அது.

தகவல் கிடைத்த உடனே, அதிரடியில் இரங்கினார் சுங்கத்துறை உதவி ஆணையர் கிளமெண்ட் ஜீவானந்தன். இவரது, தலைமையில் சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் செந்தில்நாதன், சம்பத்குமார், சுடலைமுத்து, ஜெயபால் ஆகியோர் சாலைத்தெரு பகுதிக்கு சென்று யாருக்கும் தெரியாமல் இரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வந்த தகவலில் எந்த கடை என்று தெரியாததால், கண்டுபிடிப்பதற்கு சற்று சிரமமாக இருந்திருக்கும். பொய்யான தகவலாக கூட இருக்கலாம் என்று மனம் வெறுக்கும் நேரத்தில்தான், அங்கிருந்த ஒரு கடைக்கு சந்தேகப்படும் விதமாக சிலர் வந்து சென்றனர். இதிலிருந்து, வந்த தகவல் உண்மை என்று உறுதியானது. பின்னர், உடனடியாக அந்த கடைக்குள் சென்று சுங்கத்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து, “வி ஆர் ஃப்ரம் விஜிலன்ஸ்” என்று கூறி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அந்த கடையில் ஏராளமான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக வைத்திருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

அங்கு அமெரிக்க, மலேசியா, அரேபியா, சவூதி, பஹ்ரைன் போன்ற நாடுகளின் டாலர், ரிங்கிட், திர்காம், ரியால், தினார் என பல்வேறு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். இதன் இந்திய மதிப்பு ரூ.5 இலட்சத்து 37 ஆயிரம்.

இதுதவிர, அந்த கடையில் மொத்தமாக இருந்த ரூ.1 இலட்சத்து 24 ஆயிரத்தையும் சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ஜமால் முகம்மது என்பவரின் மகன் அப்துல்ரசாக் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக இராமநாதபுரத்தில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் இராமநாதபுரம் மாவட்டத்துக்காரர்கள் கொண்டுவரும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை வாங்கி இந்திய ரூபாயாக கமிஷன் அடிப்படையில் மாற்றித் தருவதை சுய வேலைவாய்ப்புத் தொழிலாக பார்த்துள்ளார். முறையான அரசு அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணப்பரிமாற்ற நடவடிக்கை அந்நிய செலாவணி மோசடி குற்றமாகும்.

இதனை தொடர்ந்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் அப்துல்ரசாக்கை பிடித்த சுங்கத்துறையினர் மதுரையில் உள்ள அமலாக்க பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ஆளாக இருந்து, உரிய அனுமதியின்றி இதுபோன்று வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதும், இந்தியா ரூபாயாக மாற்றிக் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் அமலாக்க பிரிவு அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“இதேபோன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் சிலர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அதிரடி சோதனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் கிளமெண்ட் ஜீவானந்தன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Dowry Abuse: படுக்கை அறை முதல் பாத்ரூம் வரை கேமரா.. கொடூர டாக்டர் கணவன்.! திருமணமான 48வது நாளில் விசாகா விபரீத முடிவு.!
ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி