AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்

Published : May 27, 2026, 05:15 PM IST
ADMK

சுருக்கம்

அதிமுகவில் நீடித்த கோஷ்டிப் பூசலில் திடீர் திருப்பம். சபாநாயகருக்கு கொடுத்த கடிதத்தை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்று, ஈபிஎஸ்-ஸிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். பதிலுக்கு ஈபிஎஸ் தரப்பும் மனுவை வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து அதிமுகவில் இணைப்பு..

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இரு தரப்பிலும் சபாநாயகரிடம் பரஸ்பரம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் இசக்கி சுப்பையா உட்பட 4 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு படையெடுக்கத் தொடங்கிய நிலையில் கட்சி பலவீனமடைவதை உணர்ந்த இரு தரப்பும் இணைப்புக்கு ஒப்புக் கொண்டன.

அதன்படி வேலுமணி தலைமையில் லீமாரோஸ் உட்பட அதிருப்தி உறுப்பினர்கள் பழனசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கின. இதன் தொடர்ச்சியாக பரஸ்பரம் இரு தரப்பும் சபாநாயகரிடம் பரஸ்பரம் வழங்கிய புகார் மனுவைப் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த அதிரடி நிகழ்வுகளுக்கிடையே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இதில் எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.! குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்!
Annamalai Vs TVK Vijay: கடந்த திமுக ஆட்சியை போல தவெக அரசிலும் தொடரக் கூடாது! முதல்வர் விஜய்யை எச்சரிக்கும் அண்ணாமலை!