
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்
கோடைக்காலம் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில்,தென் தமிழக கடலோர பகுதியல் கடந்த வாரம் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி நான்கு நாட்களாக ஒரே இடத்தில் நிலைக் கொண்டு இருந்ததால், தூத்துக்குடி,கன்யாகுமரி,நாகர்கோயில் உள்ள்ளிட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது
அதுவும் தூத்துக்குடியில் 63 ஆண்டுகளுக்குப்பின் கோடையில் பெய்த கனமழை மிக அதிகமாக இருந்தது... அதாவது 200.8 mm மழை பதிவானது
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும்,கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகதில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
மேலும்,வட தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது