திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை...

Asianet News Tamil  
Published : Jul 13, 2018, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை...

சுருக்கம்

after marriage of Two months woman committed suicide

திருநெல்வேலி
 
திருநெல்வேலியில் திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால் காவலாளர்கள் இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் அடுத்துள்ளது மாடியனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பொன்சிங் (28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

திப்பணம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் விமலாதேவி (25). எம்.காம். பட்டதாரியான இவருக்கும், பொன்சிங்குக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. 

திருமணம் முடித்துக்கொண்டு இவர்கள் இருவரும் சென்னைக்கு சென்றுவிட்டனர். அங்கு விமலாதேவிக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பொன்சிங்.  சிகிச்சை பெற்ற விமலாதேவியை சில நாட்களுக்கு முன்பு மாடியனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துவந்து விட்டுவிட்டார். பொன்சிங் சென்னைக்கு திரும்பிவிட்டார். 

இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விமலாதேவி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலறிந்த பாவூர்சத்திரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், விமலாதேவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இறந்த விமலாதேவிக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி ஆட்சியர் சௌந்தர்ராஜ் மேல் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். 

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!