Latest Videos

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுக: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

By SG BalanFirst Published Jun 15, 2024, 4:21 PM IST
Highlights

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. திமுக, பாமக, நாதக கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. திமுக, பாமக, நாதக கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்த இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறி அதிமுக தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தீர்மானிக்கபட்டது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக பல அராஜகங்களைச் செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறது எனவும் அதேபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

வீட்டுக்கடன் EMI ல் சேமிப்பது எப்படி? ரூ.50 லட்சம் கடனை 10 வருடத்தில் தீர்க்க பக்கா பிளான்!

அதிமுக இதற்கு முன்பு நடைபெற்றுள்ள இடைத்தேர்தல்களை புறக்கணித்த வரலாறு உள்ளதாகவும் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலைக் கண்டு அஞ்சக்கூடிய இயக்கம் அதிமுக அல்ல என்று மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி நிறுத்தப்படுகிறார். நாம் தமிழர் கட்சியும் மருத்தவர் அபிநயாவை வேட்பாளராக நிறுத்துகிறது.

பாமகவுக்கு மறைமுக ஆதரவா?

பாமக வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், பாமக வேட்பாளருக்கு ஆதரவு என்று வெளிப்படையாகக் கூறினால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடாக எடுத்திருப்பதாக விமர்சனம் வரக்கூடும். எனவே, இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி, மறைமுக ஆதரவு தெரிவித்தால் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக அணிமாறி அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக கணக்குப் போடுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லாமல் பலவீனமாக இருக்கிறது என்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்வதே சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை படுதோல்வி அடைந்து 3வது இடத்துக்குத் தள்ளப்படவும் நேரும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பாதுகாப்பாக விலகிக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நடுவில் நிற்கும் மோடி... கீழே இறங்கிய ஜோ பிடன்! ட்ரெண்டாகும் G7 பேமிலி போட்டோ!

click me!