நடிகர்கள் சிலர் சினிமா புகழ் மட்டும் இருந்தால் போதும், முதல்வர் ஆகிவிடலாம் என நினைத்துக்கொண்டிருப்பதாவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சில நடிகர்கள் சினிமா மூலம் கிடைத்த புகழ் மூலமே முதல்வர் ஆகி விடலாம் என நினைப்பதாக என எம்.பி. திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருவதாக பேசப்படும் நிலையில் திருமா இவ்வாறு கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்ப்ரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், அரசியலுக்கு வரும் சினிமா நடிகர்களை கடுமையாக விமர்சித்தார்.
ED ரைட் ரொம்ப ஜாலியா போகுது - அமைச்சர் உதயநிதி பதில்
"யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பொது வாழ்வுக்கு வரலாம். அவர்கள் நல்லெண்ணத்துடன் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களைப் படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிக்கச் சொன்னது வரவேற்கத்தக்கது" என்றார்.
"கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வருபவர்கள் வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவரை வரவேற்கிறோம்." என்று சொன்ன திருமா, "மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கேரளாவில் நடிகர் மம்முட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சான் என பலர் சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சி செய்யவில்லை" என்றும் கூறினார்.
மொமைல் ஸ்டோரஜ் தீர்ந்து போச்சா? வாட்ஸ்அப்பில் இதை மட்டும் செய்தால் போதும்! நிறைய மெமரி சேமிக்கலாம்!
பின்னர், சினிமாவுக்கு வரும் நடிகர்கள் குறைகூறும் வகையிலும் பேசிய திருமாவளவன், "தமிழகத்தில் மட்டும் தான் மார்க்கெட்டை இழக்கும் நிலையில் இருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது" என்று சாடினார்.
மேலும், மக்கள் பணி செய்து சிறைக்குச் சென்றவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என்று நடிகர்கள் நினைப்பதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். சில நடிகர்கள் சினிமாவில் கிடைத்த புகழ் மட்டும் இருந்தால் போதும், முதல்வர் ஆகிவிடலாம் என நினைத்துக்கொண்டிருப்பதாவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
ரெண்டு நாள் உள்ள தூக்கி போட்டா தாங்குவாரா விஜய்: தயாரிப்பாளர் ராஜன் பேச்சு