ஆசிரியர் பகவானுக்கு ஜனாதிபதி விருது கிடைக்கணும்...! நடிகர் விவேக்

First Published Jun 22, 2018, 3:15 PM IST
Highlights
Actor Vivek congratulates the Teacher Bhagavan


ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால் அந்த ஆசிரியருக்கு, ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக்
டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்கள்
கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக
தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ - மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்த நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

இதை அறிந்த மாணவ - மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.

இதையடுத்து பகவானின் இடமாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி தற்பது நிறுத்தி வைத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம்
சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களும் இந்த சம்பவத்தை வெளியிட்டு பாராட்டின.

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆசிரியர் - மாணவர் இடையிலான இந்த உறவும், உணர்வும் நெஞ்சை உருக்குகிறது என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், குரு - சிஷ்யர் என பதிவிட்டு பகவான் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம், மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படியென்றால் அவரது பண்பை
நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் pic.twitter.com/m0Y19NqZUc

— Vivekh actor (@Actor_Vivek)

click me!