
சேலம்
தமிழக பா.ஜனதா தலைவி தமிழிசை சௌந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திரளாக கூடினர்.
அங்கு, தமிழக பாஜ.க தலைவி தமிழிசை சௌந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காடையாம்பட்டி ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அர்ச்சுனன் கண்டன உரை ஆற்றினார்.
இதில் தொகுதித் துணைச் செயலாளர் முனுசாமி, மாவட்ட நிர்வாகிகள் முருகன், புரட்சி மணி, மதியழகன், ஒன்றிய நிர்வாகிகள் முரளி, மூர்த்தி, சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.