ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை... எச்சரிக்கை விடுக்கும் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Apr 24, 2022, 3:52 PM IST
Highlights

ரேசன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேசன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, ஊராட்சிகளில் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர்,  600 கிராம ஊராட்சிகளில் இந்த ஆண்டு கிராம செயலகங்கள் உருவாக்கப்படும் நான் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை மீண்டும்  வந்து பார்வையிடுவேன். செங்காடு, கண்டமங்கலம் பகுதியில் மக்கள் கோரிக்கை விடுத்த சாலை கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் கிராம மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பள்ளி மேலாண்மை குழு அமைத்தது பற்றி தெரியுமா? என கிராம மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.  அதற்கு தெரியும் என பதிலளித்த பெண்ணுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.  பின்னர் செங்காடு நியாய விலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பிய நிலையில், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்குமாறு நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவிப்பதாக முதல்வரிடம் கூறினார் .

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊராட்சியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் விருப்பமாக  இருந்தது. ஆண்டுதோறும் ஆறு முறை கிராமசபை கூட்டம் நடைபெறும் என சட்டமன்றத்தில் அறிவித்தேன்.  உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 10 முதல் 15 விழுக்காடு அமரும்படி உயர்த்தப்படும். ஆளும்  கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பாராமல் அனைத்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!