ஆலடி அருணாவின் பேத்தி மரணம்…திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஆலடி அருணாவின் பேத்தி மரணம்…திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து

சுருக்கம்

ஆலடி அருணாவின் பேத்தி மரணம்…திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி நிகழ்ந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி பேத்தி பரிதாபமாக இறந்தார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி மகன் கலைவாணன். சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவரது மகள்கள் பிரியதர்ஷினி, ஆதித்தா ஆகியோரும் டாக்டர்களே.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் நினைவு நாளையொட்டி ஆலங்குளத்தில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் கலைவாணன், அவரது மனைவி, பிரியதர்ஷினி, ஆதித்தா ஆகியோர் குடும்பத்தினருடன் காரில் ஆலங்குளம் புறப்பட்டுசு சென்றனர்.

கார் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே முக்கன்பாலம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டாக்டர் பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.இறந்த பிரியதர்ஷினியின் உடலைப் பார்த்து அவரது கணவர் செந்தில் குமார் மற்றும் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை எம்.எல்.ஏ. ஆகியோர் கதறி அழுதனர்.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!