கணவனுக்கு மெசேஜ் செய்து விட்டு ஹாயாக கிளம்பிய அபிராமி!! குழந்தைகள் கொலையில் திடுக் தகவல்கள்...

Published : Sep 02, 2018, 12:27 PM ISTUpdated : Sep 09, 2018, 07:58 PM IST
கணவனுக்கு மெசேஜ் செய்து விட்டு ஹாயாக கிளம்பிய அபிராமி!! குழந்தைகள் கொலையில் திடுக் தகவல்கள்...

சுருக்கம்

குழந்தைகளே போயாச்சு, இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டு கணவனுக்கும் தனது சொந்தக்காரர்களுக்கு  வாட்ஸ் ஆப் மெசேஜ் மற்றும் எஸ்எம்எஸ்  அனுப்பி விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்  குழந்தைகளை கொன்ற அபிராமி.

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.  கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்கு கணவரின் டார்ச்சரால் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளானார் அபிராமி. இதனால் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன்  தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்டு வந்துள்ளார் அபிராமி. 

இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய்  அலுவலகத்திலேயே தங்கிவிட்டார், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அபிராமி, டி யில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். தாயின் உல்லாசத்துக்கு தாம் தடையாக இருப்பதால் கொள்கிறார் என தெரியாமல் அதை வாங்கிக் குடித்த பிஞ்சுகள் குடித்துள்ளது. சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளி துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், வேலை முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவர் விஜய் வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டிருந்தது  அப்போது வீட்டின் வெளியே அபிராமியின் ஸ்கூட்டி இல்லாததால் அவர் எங்கேனும் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்தார். இதனையடுத்து அவரது அபிராமிக்கு பலமுறை போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  

பின்னர் நீண்ட நேரமாகியும் வராததால் அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டாரோ என நினைத்து அவர்களுக்கு போன் கால் செய்துள்ளார்.  ஆனால் அவர்கள் அங்கு அவர் வரவில்லை என்றதும் சந்தேகமடைந்த விஜய், மீண்டும் வீட்டுக்கு சென்ற போது கதவு வெளிப்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே போன விஜய் குழந்தைகள் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். 

இதற்க்கு முன்னதாக,  விஜய்க்கும் அவரது உறவினர்களுக்கும் அபிராமியின் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் குழந்தைகளே போய்விட்டனர். இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டிருந்தார்.  இதையடுத்து எதற்காக இப்படி செய்தாய் என கேட்டு விஜய், அபிராமிக்கு வாட்ஸ் ஆப் எஸ்எம்எஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. அவரது  மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  

கடைசியாக அபிராமியின் செல்போன் சிக்னல் கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. இதைவைத்து இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு அபிராமி வெளியூர்க்கு தப்பித்துள்ளார். வீட்டிலிருந்து அபிராமியை அழைத்து சென்ற கள்ளக் காதலன் சுதாகர் அபிராமியை நாகர் கோவிலுக்கு பஸ் ஏற்றி விட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு மீண்டும் பிரியாணி கடைக்கு வந்துள்ளார்.

இதனிடையே அவருக்கு சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததை விஜய் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து குன்றத்தூர் பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர்.  

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!