கலாசலா கலசலா... சின்னம்மா சின்னம்மா... ஜூலியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய அதே நாள் இன்று...

 
Published : Jan 21, 2018, 02:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
கலாசலா கலசலா... சின்னம்மா சின்னம்மா... ஜூலியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய அதே நாள் இன்று...

சுருக்கம்

A young woman became popular on last year

தமிழகமே இன்று கழுவி கழுவி ஊத்தும் உத்தமி ஜூலியின் வாழ்க்கையில் மறக்க முடியாத... உலக தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்ற அதே நாள் தான் இன்று.

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு இதே மாதம் சென்னை மெரினா கடற்கரையில் இளம் தலைமுறையினர் அமைதிப் புரட்சி நடத்தினர். கல்லூரி மாணவ, மாணவியர், குடும்பத் தலைவிகள் என்று ஏராளமானோர் அந்த புரட்சியில் கலந்து கொண்டனர். மெரினா புரட்சியில் எத்தனையோ பெண்கள் கலந்து கொண்டபோதிலும் ஒரு இளம்பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாங்க இந்த உத்தமி ஜூலி...

சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம் விண்ணை முட்டுகிறது. பல்வேறு கோஷங்களை அந்த இளம் பெண் எழுப்ப, அருகே நிற்கும் தோழிகளும் அதற்கு பதிலாக கோஷமிடுகிறார்கள். கருப்பு சுடிதார் அணிந்துள்ள அந்த இளம் பெண் வார்த்தையை, ஏற்ற இறக்கம் செய்து கோஷமிடும் காட்சி பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலானது மிகவும் உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக அந்த பெண் கோஷம் கம்பீரமாக ஒலித்தது. அதிலும், சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று கோஷமிடும்போது அந்த பெண் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை பார்த்தால் ஓ.பி.எஸ் உடனே மெரினா பீச் வந்து குறைகளை கேட்க தொடங்கும் அளவிற்கு இருந்தது.

அதே போல ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் கொந்தளித்து போராடிக்கொண்டிருக்கும்போது முதல்வர் ஓ.பி.எஸ்சும் சசிகலாவும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்து பார்த்தனர். இதனால் கலாசலா கலசலா எங்கடி போனா சசிகலா அந்த இடத்தையே கதிகலங்க வைத்தார். அப்போது ஒட்டு மொத்த அதிமுகவும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் ஒரு பெண் இப்படி தில்லாக போட்ட கோஷத்த தமிழ்நாடே வியந்து பார்த்தது.

''காணோம் காணோம் ஓபிஎஸை காணோம், வரச்சொல் வரச்சொல் ஓபிஎஸை வரச்சொல், கலாசலா கலசலா எங்கடி போன சசிகலா, சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா என்ற இந்த கோஷம் விண்ணை முட்டியது. இந்த தைரியமான பெண்ணை தமிழக ஊடகங்கள் தூக்கிப்பிடித்து. 

ஊடகங்களின் இந்த வேலையால் தமிழகமே மிரண்டு பார்த்த இந்த ஜூலியானா ஜல்லிக்கட்டு போராளி என்ற பெயரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை நாசமாக்கிக்கொண்டார். ஜல்லிகட்டுப் போராட்டத்தில் வீர தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட இதே ஜூலி முதல் எபிசோடில் செய்த காரியம் பார்வையாளர்களின் மனநிலையை மாற்றியது.

சக பங்கேற்பாளரான இளம் நடிகர் ஸ்ரீ அந்தப்பக்கம் வந்தபோது  ஏன் இப்படி சோகமா இருக்கிறீங்க "ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என் நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு..." என்று பகீர் ரக பேச்சு பேசினார் ஜூலி.

இந்த முதல் எபிசோடிலேயே மொக்கை வாங்கினார். அடுத்தடுத்து வந்ததில் வாயை திறந்தாலே பொய், தனது டுபாக்கூர் வேலையே காட்டினார். ஒரு பெண் எப்படி இருக்க கூடாது என்பதை எல்லோருக்கும் காட்டினார். அவரை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கழுவி கழுவி ஊத்தினார்கள். ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்த இந்த பெண் விளம்பரப் படங்கள், டிவி தொகுப்பாளினி என்ற புதிய அவதாரங்களை எடுத்த ஜூலி தற்போது தனக்கு எந்த விதத்திலும் பொருந்தாத உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். ரசிகர்களை வெறுப்பை சம்பாதித்த ஜூலி சின்னம்மா சின்னம்மா... கலாசலா கலசலா... வரசொல் வரசொல் என கோஷமிட்டு எல்லோரையும் ஏமாற்றி பிரபலமடைந்த நாள் இன்று.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!