91வயதிலும் “அசராமல் அஞ்சலக பணி”....ஓய்வுக்கு பின்னும் “சேவை செய்யும் போஸ்ட்மேன்”

First Published Oct 21, 2017, 5:15 PM IST
Highlights
91 years old postmen

தபால்துறையில் ஓய்வு பெற்று 32 ஆண்டுகளுக்கு பின்பும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஞ்சலக ஊழியர்.தளராத நடையிலும், தபால்துறையை மக்களிடம் அதிகமாக கொண்டு செல்லவேண்டும் என்ற தள்ளாடத நோக்கமும், 91 வயதான குருசாமியை 70 ஆண்டுகளாக இந்தசேவையில் ஈடுபடச் செய்துள்ளது. இவரை இப்பகுதி மக்கள் “பி.எம்.ஜி.” என்ற அடைமொழியோடு அன்பாக அழைக்கிறார்கள்.ராமநாதபுரம் மாவட்ட தலைமை தபால்நிலையத்தில் நிரந்தரமில்லாத , சாதாரண ஊழியராக குருசாமி தனது 16-வயது பணிக்கு சேர்ந்தார். அதன்பின் 1942ம் ஆண்டு வெள்ளையனை வெளியேறு இயக்கத்தில் சிறை சென்றபின் மறுநாள் ஆங்கிலேயர்கள் இவரை விடுவித்தனர். இவர் மீது வழக்கு ஏதும் இல்லாததையடுத்து, தொடர்ந்து தபால்துறையில் பணியாற்றி நிரந்தர ஊழியராக மாறினார்.இதையடுத்து 1943ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி மண்படம் தபால் நிலையத்தில் 4-வது பிரிவு ஊழியாரக பணியமர்த்தப்பட்டார். ஏறக்குறைய 42 ஆண்டுகள் பணியாற்றிய பின் கடந்த 1985ம் ஆண்டு கிரேடு போஸ்ட்மேனாக ஓய்வு பெற்றார். அதன்பின்பும், வீட்டில் ஒரு ஓரத்தில் முடங்கி விடாமல், மக்கள் சேவையையாற்ற எண்ணி, தொடர்ந்து 32 ஆண்டுகளாக, தன்னுடைய 91 வயதிலும் குருசாமி ராமநாதபுரம் தபால்நிலையத்துக்கு நாள்தோறும் பணிக்கு வருகிறார்.

தபால்நிலையத்துக்கு வரும் மக்களிடம் அஞ்சல்தலைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவது, தபால்நிலைய சிறுசேமிப்பு, தங்கமகள் சிறுேசமிப்புதிட்டம், சுயமாக அஞ்சல்தலை வெளியிடுவது குறித்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

காலை நேரத்தில் 2 மணிநேரமும், மாலை நேரத்தில் ஒரு நேரமும் தபால்நிலையம் வரும் குருசாமி, அங்கு வரும் சாமானிய மக்களுக்கு படிவங்களை நிரப்பிக்கொடுத்தல், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் முறையை விளக்குதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தபால்நிலைய சிறுசேமிப்பு குறித்து மாணவர்களிடமும், கிராமப்புற மக்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறார்.

91 வயதிலும் தொடர்ந்து சேவையாற்றும் குருசாமியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “இறைவன் நல்ல உடல்நிலையை எனக்கு கொடுத்து இருக்கிறார்.் என்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்வேன். சொந்தமாக தபால்தலை வெளியிடும் திட்டத்தை நான் பிரபலப்படுத்தி 150 பேர் சுயமாக அஞ்சல்தலை வெளியிடச் செய்து இருக்கிறேன். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அவரின் சகோதரர் ஏ.பி.ஜே. மரைக்காயர் ஆகியோருக்கு சுயமாக அஞ்சல்தலை உள்ளது” எனத் தெரிவித்தார்.

குருசாமி குறித்து தபால்நிலைய கண்காணிப்பாளர் என்.ஜே. உதய்சிங் கூறுகையில், “ ஓய்வுக்கு பின் யாரும் தபால்நிலையம் வருவதில்லை, ஆனால், குருசாமி 32 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். நாங்களும் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியும் அவர் தொடர்்ந்து வருகிறார். இவர் எங்களுடன் இருப்பது மிகப்பெரிய பரிசு” என்றார்.

click me!