பொதுத்தேர்வு எழுத ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமா? அமைச்சர் விளக்கம்

By Velmurugan s  |  First Published Mar 18, 2023, 2:26 PM IST

ஆண்டுக்கு மூன்று நாட்களுக்கு மட்டும் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லாம் பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்கள். 

அவர்களுக்கு தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும், எனவே அவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் தேர்வு எழுத வாருங்கள். அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் என கூறினோம். அடுத்த ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படாது. ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. 

Latest Videos

தர்மபுரியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் காட்டு யானை பலி

கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்த நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பு அது. வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

click me!