
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 57 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த சக்கராபள்ளியில் முகமதியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது.
இதனால் தீயின் தீவிரம் அதிகரித்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இருந்த 57 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து வந்த திருவையாறு, திருகாட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம் பகுதிகளில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்ப்பகுதியில் உள்ள குப்பைக் குழி ஒன்றில் பற்றிய தீ வீடுகளுக்கு பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், 5 கிலோ அரிசி மற்றும் வேட்டி – சட்டை ஆகியவை நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.