
போராட்டக்காரர்களை கலைத்தபோது கலந்து சென்ற இளைஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட 28 போலீசார் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் திரண்ட போராட்டக்காரர்கள் 6 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நட்த்தினர். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வந்தன.
அதன் பின்னரும் போலீசார் வேண்டுகோளை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவந்தனர். இதனால் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஆனால் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் கடுமையாக நடந்துகொண்டனர். பெசண்ட் சாலையில் கூடி நின்ற அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தப்பட்டது.
அதன்பின்னர் போராட்டம் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையிலும், ராயபேட்டையிலும் பரவியது. இதையடுத்து நடந்த கல்வீச்சில்போலீஸ் கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் , துணை ஆணையர் ஜெயகுமார் உள்ளிட்ட 28 போலீசார் காயமடைந்தனர்.
சரமாரியாக கல்வீச்சு நடந்தது. மாடிகள் மீது நின்று காவல்துறை மீது கல்வீச்சு நடத்தியதால் காவலர்கள் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியே கலவரமாக காட்சியளிக்கிறது.