10ம் வகுப்பு பையனை இழுத்துக்கொண்டு ஓடிய 35 வயது ஆண்டி.. ஒரு வழியாக 6 நாட்களுக்கு பிறகு கைது..!

By vinoth kumar  |  First Published Nov 5, 2021, 7:39 PM IST

 தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார் பாலகுரு - ராசாத்தி தம்பதியரின் மகன் பரத். இந்நிலையில், பரத்துக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.


திருவாரூரில் 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் தலைமறைவாகி இருந்த பெண்ணை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு - ராசாத்தி தம்பதியர். இவர்களுக்கு பரத் என்கிற மகனும், சாரதி, பாரதி என்ற மகள்களும் உள்ளனர். அதே தெருவில் கட்டிட வேலை செய்கின்ற பாலகிருஷ்ணன் - லலிதா என்கிற தம்பதியினரும் வசித்து வந்துள்ளனர்.இவர்களுக்கும் 13 வயதில் மகள் உள்ளார். லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கு அருகே உள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார் பாலகுரு - ராசாத்தி தம்பதியரின் மகன் பரத். இந்நிலையில், பரத்துக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த விவகாரம் பரத்தின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கண்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி பரத்தை  எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர்.  சித்தி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்த பரத் லலிதாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார்.இந்நிலையில்,  கடந்த 26ம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பரத் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிய பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், லலிதாவும் காணவில்லை. இதனால், சந்தேகமடைந்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத் காணவில்லை என்று அவரது தந்தை பாலகுரு புகார் அளித்தார். 

அதன்பேரில், காவல்துறை நடத்திய விசாரணையில் கிருத்துவ மேரி என்பவர் பரத் - லலிதா இருவரையும் பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரிய வந்தது. அதை அடுத்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தனபால்,  இருவரையும் பூந்தோட்டம் ஊரில் இறக்கி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, லலிதாவின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து அவரை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு, லலிதாவை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டனர். வேளாங்கண்ணி சென்று, அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். 35 வயதுடைய லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர். மேலும், 15 வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடமும் ஒப்படைத்தனர்.

click me!