வனத்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய மக்கள் .. - காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு தராததால் கிராமவாசிகள் ஆத்திரம் ..

By Asianet Tamil  |  First Published Aug 17, 2019, 12:36 PM IST

காட்டு யானைத் தாக்குதல்களில் இருந்து முறையான பாதுகாப்பு வழங்காததால் , கிராமமக்கள் சேர்ந்து வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கினர் .


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கிறது தேனிக்கோட்டை கிராமம் . இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் மலையில் இருந்து இறங்கி வந்து பயிர்கள் , வீடுகள் போன்றவற்றை சேதப்படுத்திச் செல்கிறதாம் . உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன .

Tap to resize

Latest Videos

undefined

இதுகுறித்து பலமுறை வனத்துறையிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .இந்த நிலையில் தான் கிராமத்தில் இருக்கும் அம்பையா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரை காட்டுயானை தாக்கியுள்ளது . இதில் அம்பையா சம்பவ இடத்திலேயே பலியானார் .கடுமையான காயங்களுடன் நாகராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தில் திரண்டனர் . பலமுறை புகார் அளித்தும் காட்டுயானைகளை விரட்டுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வனத்துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர் .

பின்னர் காவல்துறை வந்து சமாதானம் பேசி அவர்களை களைந்து போகச்  செய்தனர் .

click me!