தனியார் சொகுசு பேருந்தில் தீ விபத்து... 20 பேர் உயிர் தப்பிய அதிசயம்..!

Published : May 09, 2019, 01:18 PM IST
தனியார் சொகுசு பேருந்தில் தீ விபத்து... 20 பேர் உயிர் தப்பிய அதிசயம்..!

சுருக்கம்

ஓசூர் அருகே தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீப்பிடித்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஓசூர் அருகே தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீப்பிடித்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

பெங்களூரில் இருந்து திருப்பூர் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்