காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஏழை குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு துறை மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஓசூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பு துறை மாநில தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்வோம். ஏழைகள் வீட்டில் படித்த மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு மாதம் 8,500 ரூபாய் என ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்குவோம். அதேபோல அவர்களது குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழே இருந்தால் அவர்களின் தாய்க்கு மாதம் 8,500 ரூபாய் கொடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் என்னைவிட என் மனைவி தான் டிரெண்டிங்கில் உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு
தமிழ்நாட்டில் காமராஜரால் அனைவரும் கல்வி பெற்றனர். அதிகம் படித்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 100 பேர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் 55 முதல் 60 பேர் வரை கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இது போன்ற இளைஞர்களுக்கு நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை. ஏழை குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கும், அவர்களின் தாயாருக்கும் என மாதம் 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர முதலமைச்சர் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ஒரு ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 18ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றார்.
மோடிக்கு எதிராக ராகுலும், ஸ்டாலினும் வியூகம் வகுத்து களமாடி வருகின்றனர் - பிரசாரத்தில் திருமா பேச்சு
இதுபோன்று உலகத்தில் எந்த அரசாங்கமும் வழங்கியிருக்காது. உலகத்தில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த உடன் இதனை செய்யப்போகிறது. இது தான் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்பாகும். ஏழை என்ற பேச்சு இந்தியாவில் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.