விஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..!

Published : Jun 27, 2019, 03:31 PM ISTUpdated : Jun 27, 2019, 03:32 PM IST
விஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..!

சுருக்கம்

கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் 3 பேர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரை விஷவாயு தாக்கியதையடுத்து மீதமுள்ள 2 பேரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர் பாதுகாப்பு கவசமின்றி இறங்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!