காதல் மனைவியுடன் திருட்டு பைக்கில் ட்ரிப்; தாலியின் ஈரம் காய்வதற்குள் இளைஞரை தூக்கி சென்ற போலீஸ்

By Velmurugan s  |  First Published Jun 26, 2024, 10:49 PM IST

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் முடித்துவிட்டு மனைவியுடன் திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஓம் சக்தி கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த்(வயது 22). இவர் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை வந்தனர்.

இன்று வடமதுரையில் உள்ள விநாயகர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடமதுரை மாரியம்மன் கோயில் வளைவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது அவர்களின் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளை வழி மறித்து நின்றது. 

Tap to resize

Latest Videos

undefined

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; அதிமுக எம்எல்ஏ விடுதலை

அதிலிருந்து இறங்கிய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வசந்த்தை பிடித்து காரில் ஏற்றி வடமதுரை காவல் நிலையம் கொண்டு சென்றனர். வந்தவர்கள் காவல்துறையினர் என்பது தெரியாமல், மணமகளின் உறவினர் என்று நினைத்து மணமகனின் நண்பர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் தாங்கள் காவல்துறையினர் என்றும், வேறு ஒரு வழக்கிற்காக வசந்த்தை கைது செய்வதாகவும் கூறி கல்லூரி மாணவியையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிச்சென்று வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். 

மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?

மேலும் அங்கு சினிமா பாணியில் நடந்த காட்சிகளைக் கண்டு, என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்துடன் நின்றனர். அதனைத் தொடர்ந்து விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தபோது வசந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதுநகர் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதாகவும், அவர் வடமதுரையில் இருப்பது தெரிந்து அவரை பிடிப்பதற்காக சாதாரண உடையில் வந்ததும் தெரியவந்தது.

ஆனால் காவல்துறையினர் தன்னை பிடிக்க வருவார்கள் என்று அறியாத வசந்த் இன்று திருமணம் செய்து கொண்டு, காதல் மனைவியுடன் திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வசந்தை கைது செய்து விருதுநகர் அழைத்துச் சென்றனர். அவர் திருடி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அதன்பின்னர் வடமதுரை மகளிர் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வடமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!