பிரதமர் குறித்து சர்ச்சை கருத்து திண்டுக்கல்லில் பாஜக, காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்; போலீஸ் குவிப்பு

By Velmurugan sFirst Published Dec 8, 2023, 10:42 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கண்டித்து பாஜகவினர் மேற்கொண்ட போராட்டத்தின் போது இரு கட்சியினரிடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டத் தலைவராக துரை மணிகண்டன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பதிவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தொடர்ந்து பதிவு போர் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் துரை மணிகண்டன் தலைமையில் காத்திருந்தனர். 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்கள், காவலர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அப்போது பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி வந்த நிலையில், பேருந்து நிலையம் அருகில் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த சிலர் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி கற்களை எரியத் தொடங்கினர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கற்களை வீசினர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, அடிதடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களையும் கைது செய்து தனித்தனியாக திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!