என் தொகுதியை நம்பர் 1 தொகுதியாக மாற்றுவதே மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் - சௌமியா அன்புமணி

By Velmurugan s  |  First Published Mar 29, 2024, 6:31 PM IST

தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்தால் மக்களுக்கு நன்றி கடனாக தண்ணீர் பிரச்சனையை நீக்குவேன், பின்தங்கிய சட்டமன்ற தொகுதியாக உள்ள அரூர் சட்டமன்ற தொகுதி முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.


தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் பரப்புரையை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் சௌமியா அன்புமணியை மலர் தூவி ஆரவாரமாக வரவேற்றனர்.

நிர்மலா சீதாராமனை யாசம் பெறுபவர்களோடு ஒப்பிட்டு பேசிய ஈவிகேஎஸ்; ஈரோட்டில் பரபரப்பு பேட்டி

Tap to resize

Latest Videos

அப்போது பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தருமபுரி மாவட்டம், வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ளது. குறிப்பாக அரூர் சட்டமன்றத் தொகுதி மிகவும் பின்தங்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இதை முதன்மை தொகுதியாக மாற்ற வேண்டும் என பேசினார். மேலும் இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு செக் டேம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே குடிநீர் பிரச்சனை நீங்கும். 

“20 வருசமா ரோடு சரியில்ல” பிரசாரத்தின் போது கேட்ட ஒற்றை கேள்வி; கடுப்பாகி பாதியில் கிளம்பிய தங்க தமிழ்செல்வன்

அதேபோல வேலை வாய்ப்பு இல்லாததால் இப்பகுதி மக்கள் கர்நாடகா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். எனவே தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் ஒன்றை அமைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பிரதமர் மோடியிடம் சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

click me!