தருமபுரியில் மாயமான பள்ளி மாணவின் உடல் எலும்பு கூடுகளாக மீட்பு

By Velmurugan s  |  First Published Feb 3, 2023, 1:40 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் காட்டின் மைய பகுதியில் எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொது தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார். 

திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவுரும் கோயமுத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை. 

Tap to resize

Latest Videos

தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன், பள்ளி மாணவி ரயில் மோதி பலி

தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர், எஸ் அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தனது மகளாக இருக்குமோ என எண்ணி இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தனது மகள் தான் என்று உறுதி செய்தனர். இது தொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினுக்கு தகவல் அளித்ததன் பெயரில் சோதனை செய்து மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகள், அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டி என் ஏ பரிசோதனை மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.

குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவி!! 

இந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தற்கொலை அல்ல இந்த கொலையில் யார் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த, 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் எலும்பு கூடுகளாக கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!