நள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்..! பெற்றோர் பரிதவிப்பு..!

By Manikandan S R S  |  First Published Jan 24, 2020, 1:31 PM IST

தருமபுரி அருகே 10 வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்து இருக்கிறது மேல்சவுளுப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் மணிமேகலை. 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. வீட்டிலும் யாரிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

சம்பவத்தன்று இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலையில் பெற்றோர் விழித்துப்பார்த்த போது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மணிமேகலை தூக்கில் பிணமாக தொங்கினார். அதைக்கண்டு குடும்பத்தினர் கதறி துடித்தனர். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் பிரச்சனையால் சிறுமி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க கூடுமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 16 வயது சிறுமியின் மர்ம மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: ஓ.பி.எஸ் மகன் கார் மீது சரமாரி தாக்குதல்..! தேனியில் பரபரப்பு..!

click me!