தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பற்றாக்குறை... பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அதிரடி தகவல்!

By Asianet TamilFirst Published Jun 15, 2019, 10:35 AM IST
Highlights

தற்போது தண்ணீர்ப் பற்றக்குறை தீவிரமாகி உள்ள நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
 

தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை பூதாகரமாகிவரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, சென்னையச் சுற்றிள்ள மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தீவிரமாகி உள்ளது. தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலைந்தவண்ணம் உள்ளனர். தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவங்களில் தண்ணீரை வீட்டிலிருந்து எடுத்துவரும்படி அறிவுறுத்தியுள்ளார்கள். ஐ.டி. நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலையை செய்யும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


இந்நிலையில் பள்ளிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையை எப்படி சமாளிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறந்தன. அப்போது வெயில் அதிகமாக இருப்பதையும், தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதையும் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டி கோடை விடுமுறையை நீட்டிக்க வலியுறுத்தினர். ஆனால், திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தண்ணீர்ப் பற்றக்குறை தீவிரமாகி உள்ள நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.


இதுகுறித்து பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற செய்தியை செங்கோட்டையன் மறுத்துள்ளார். “பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்திதான். பள்ளிகளில் தண்ணீ தட்டுப்பாடு என்று தகவல் வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி திரட்டப்படும். சில பள்ளிகளில் மட்டுமே தண்ணீர் பிரச்சினை உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்தப் பள்ளிகளில் திங்கள் கிழமை ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

click me!