சென்னையில் பயங்கரம்.. அதிகாலை டீ குடிக்க வந்த விசிக பிரமுகர் வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

By vinoth kumar  |  First Published Apr 27, 2023, 11:18 AM IST

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் ரமேஷ்.  இவர் மீது எம்ஜிஆர்.நகர் மற்றும் தி.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.


சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் ரமேஷ்.  இவர் மீது எம்ஜிஆர்.நகர் மற்றும் தி.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் ரமேஷ்  கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள டீ கடையில் டீ குடிக்க நின்றுக்கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என் வாழ்க்கையே உன்னால தாண்டா நாசமா போச்சு.. நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை.. பகீர் பின்னணி.!

அப்போது, காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- 56 வயசுல இதெல்லாம் தேவையா.. 24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டல்.. வக்கிரம் பிடித்த காமக்கொடூர ஆசிரியர்.!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில்  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கின்றனர். சென்னையில் பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!