தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்..!

By vinoth kumar  |  First Published Jul 5, 2021, 1:25 PM IST

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து வரும் 11-ம் தேதி தான் 8.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என தெரிவித்தார். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11-ம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.

தடுப்பூசி மற்றும் மதுரை எய்ம்ஸ் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த வார இறுதியில் டெல்லி செல்ல உள்ளதாக ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராயநகரில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 5 ஆயிரம் வணிகர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து வரும் 11-ம் தேதி தான் 8.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என தெரிவித்தார். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11-ம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து தடுப்பூசி மற்றும் மதுரை எய்ம்ஸ் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த வார இறுதியில் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். 

click me!