மே 18,19 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் ரத்து!

By Manikanda Prabu  |  First Published May 17, 2024, 6:39 PM IST

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது


சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் என பல்வேறு பகுதிகளுக்கு இந்த புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே 18, 19 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

 

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 15 மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது pic.twitter.com/y45y8Aa5AK

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

அதேபோல், செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தகவல்!

click me!