சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு, பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் நாளை முதல் ஓராண்டு காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் 15.03.2024 முதல் 14.03.2025 வரை ஓராண்டு காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?
* பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
* அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. 50,000ஐ நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!