உணவு கொண்டு வர விமான பணியாளர்களுக்கு தடை…. – ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவு

By manimegalai aFirst Published Jun 20, 2019, 11:53 AM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு முன், மதிய உணவு சாப்பிட்ட பாத்திரத்தை யார் கழுவி வைப்பது என்பதில், விமானிக்கும், விமான பணிக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, விமான பணியாளர்கள் யாரும் உணவு எடுத்து வரக்கூடாது என தடைவிதித்து, ஏர்இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், மதிய உணவு சாப்பிட்ட பாத்திரத்தை யார் கழுவி வைப்பது என்பதில், விமானிக்கும், விமான பணிக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, விமான பணியாளர்கள் யாரும் உணவு எடுத்து வரக்கூடாது என தடைவிதித்து, ஏர்இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்யவந்தவர்கள், அனைத்து சோதனைகளையும் முடித்து கொண்டு, விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ஆனால், விமானி குறித்த நேரத்துக்கு வரவில்லை. இதனால், சுமார் 2 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.

இதற்கிடையில், விமானம் தாமதமாக புறப்பட்டதற்கான காரணம் குறித்து, விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்தன்று, உணவு பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பதில், கொல்கத்தாவுக்கு காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தின் விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் மோதல் ஆனது. இதனால், விமானம் தாமதமானது தெரிந்தது.

விமான நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட மோதலால், விமானம் புறப்படுவது தாமதம் ஆனது. அதில் பயணம் செய்ய வந்தவர்களும் கடும் சிரமம் அடைந்தனர். இதனால், விமான நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக, 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஏர்இந்தியா உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் தொடர்பாக இருதரப்பிடமூ விசாரிக்க இருக்கிறோம். விசாரணையின் முடிவில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானிகள் யாரும், விமானத்தில் உணவை எடுத்து வரக்கூடாது என தடை உத்தரவு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

கடந்த மார்ச் மாதம், இதேபோல் நடந்த ஒரு சம்பவத்தில், விமானிகள் யாரும் தங்களுக்கு சிறப்பு உணவை ஆர்டர் செய்யக் கூடாது என ஏர்இந்தியா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

click me!