ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும்... அரசை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!

By vinoth kumarFirst Published May 14, 2020, 1:47 PM IST
Highlights

ஒரு போதும் மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது. பரிசோதனைகளால் தான் நோய் தொற்றின் அளவு குறித்து அறிய முடியும். அதிக பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என யாரும் அச்சப்பட வேண்டாம்.  விரைவாக தொற்று கண்டறியப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைக்கலாம். கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது என பிரதீப் கவுர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது என  மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2 முறை நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டித்தும், கட்டுப்பாடுகளை அறிவித்தும் அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. தற்போது 17-ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறித்து தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பிறகு, அரசுக்கு அளித்த பரிந்துரைகள் பற்றி மருத்துவ நிபுணர்கள் பேட்டியளித்து வருகின்றனர். 


 
அதில், ஒரு போதும் மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது. பரிசோதனைகளால் தான் நோய் தொற்றின் அளவு குறித்து அறிய முடியும். அதிக பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என யாரும் அச்சப்பட வேண்டாம்.  விரைவாக தொற்று கண்டறியப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைக்கலாம். கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது என பிரதீப் கவுர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா இறப்போர்கள் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு ஏற்றம், இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், ஆகையால், யாரும் பயப்பட வேண்டாம். பதற்றமடையாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதிக தொற்றுள்ள பகுதிகளை உடனடியாக கண்டறிந்து அங்கேயே பரவலை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

மேலும், பேசிய அவர் அறிகுறி இருப்பவர்கள் பணிக்கு செல்லக் கூடாது. மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் ஊரடங்கை முழுமையான தளர்த்தினால் தொற்று அதிகரிக்கும். ஆகையால், படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழக்க நேரிடும். நகரங்களில் கொரோனாவை தடுக்க ஐ.நா. சபை பல திட்டங்களை வகுத்துள்ளது. நொய் தடுப்பு மட்டுமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

click me!