தமிழ் பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் மாற்றமா? போட்டியாளர்கள் பற்றி வெளியே கசிந்த தகவல்!

Published : May 01, 2020, 03:57 PM ISTUpdated : May 01, 2020, 04:00 PM IST
தமிழ் பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் மாற்றமா? போட்டியாளர்கள் பற்றி வெளியே கசிந்த தகவல்!

சுருக்கம்

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.    

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மலேசிய பாப் பாடகர், முகேன் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தர்ஷன், லாஸ்லியா, கவின் ஆகியோர் ஒரு சில காரணங்களால் வெற்றிபெறவில்லை.

ஒரு வேலை பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு,  கவின் வெளியில் வரவில்லை என்னால், அவரே வெற்றியாளராக மாறியிருக்கலாம். லாஸ்லியா பைனல் போக வேண்டும் என்பதற்காக கவின் தானாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது/

இதை தொடர்ந்து ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓவ்வொரு  நாளும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக் பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, ஓவியா, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமான சிலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருகிறார்களாம் விஜய் டிவி நிகழ்ச்சி தரப்பினர். 

இப்படி பல தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது, பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் நாளில் தான் தெரியவரும்.

அதே நேரத்தில், ஏற்கனவே தமிழில் 3 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசனுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கவும் வாய்ப்புதாக கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்காக வெளியாகும் தகவல் எதுவும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

PREV
click me!

Recommended Stories

SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Chennai Rain Alert: சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை.! இன்று இரவு மீண்டும் கனமழை வெளுக்கும்.! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!