ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கும் பணி தீவிரம்.. வேளச்சேரியில் பதற்றம்.. போலீசார் குவிப்பு..!

Published : Jun 19, 2019, 05:46 PM IST
ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கும் பணி தீவிரம்.. வேளச்சேரியில் பதற்றம்.. போலீசார் குவிப்பு..!

சுருக்கம்

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளி வருகின்றனர். 

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளி வருகின்றனர். 

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கும், மேம்பால சர்வீஸ் சாலைக்கும் இடையே உள்ள 1.15 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கடந்த 2004-ம் ஆண்டு ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கியது. தற்போது அந்த இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு, கடைகள் மற்றும் வணிக வளாகம், டீக்கடை, ஓட்டல், விடுதிகள் என 400/க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். சுமார் 200 கோடி மதிப்புகொண்ட அவ்விடத்தில் இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தன.

கடந்த 2 மாதங்களுக்கு முன் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.  ஆனால், அந்த உத்தரவை  யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், அடையாறு போலீசார் உதவியுடன் வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று இடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிமுக பிரமுகர்கள் இருவர் ஆக்கிரமிப்பு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கட்டி பயன்பாட்டுக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!