நடுக்கடலில் கேரள கப்பல் மாயம் – 243 பேர் என்ன ஆனார்கள்…?

By Asianet TamilFirst Published Jun 22, 2019, 1:17 PM IST
Highlights

கேரளாவில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலில் திடீரென மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த, 243 பேர் கதி என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கேரளாவில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலில் திடீரென மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த, 243 பேர் கதி என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் துறைமுகத்தில் இருந்து, தேவமாதா என்ற கப்பல், கடந்த ஜனவரி மாதம், பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. இதில், 243 பேர்  பயணம் செய்தனர். கப்பல் புறப்பட்டு சென்ற 5 மாதத்துக்கு மேலாகியும், சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கப்பலில் இருந்தும், எந்த தகவலும் இல்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கப்பலில் இருந்த கேப்டன், ஊழியர்கள், பயணிகள் ஆகியோரை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள்  கூறுகின்றனர்.

இதுபற்றி, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''கடந்த ஜனவரி மாதம், எர்ணகுளத்தல் இருந்து புறப்பட்ட கப்பல் மாயமானது குறித்து, பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை தகவலும் வரவில்லை என்றார்.

click me!