எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு.. கதறிய மருத்துவர்கள்.. பிரியா வழக்கில் நீதிபதி வைத்த டுவிஸ்ட்..!

By vinoth kumarFirst Published Nov 19, 2022, 7:58 AM IST
Highlights

இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர். 

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னும் குணமடையாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.

இதையும் படிங்க;- பிரியா மருத்துவ அறிக்கை வெளியீடு.. வெளியான பகீர் தகவல்.. கைதாகிறார்கள் மருத்துவர்கள்?

தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15ம் தேதி மரணமடைந்தார். பெரியார் நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரண்டு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்தனர்.  இந்த மனு நேற்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க;- சென்னை வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. அலட்சியமாக இருந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம்.. எச்சரிக்கும் மருத்துவர்.!

அப்போது அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் என்று எப்படி கூறுகிறீர்கள்? என ஆவேசமாக நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர்கள் சரணடைந்து கொள்ளலாம் என்றார்.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரண் அடைவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர். 

இதையும் படிங்க;-  பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயில், பஸ், மின்சார ரயில் பயணிக்க ஒரே டிக்கெட்.! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

click me!