சென்னையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு எதிராக இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் : போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கிடங்காக மாறிய தமிழகம்... திமுகவுக்கு எதிராக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்..!
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் குறித்தும், வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக், ஜாபர் சாதிக்குக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து முழுமையான சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.