எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.. நெகிழ்ந்த விஜயகாந்த்..

By Raghupati R  |  First Published Dec 11, 2023, 9:51 PM IST

எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், 21 நாட்களுக்குப் பின்னர் குணமடைந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூரண நலம்‌ பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும்‌, அரசியல்‌ கட்சி பிரமுகர்களுக்கும்‌, தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும்‌, கழக நிர்வாகிகள்‌, கழகத்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌, எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல  உள்ளங்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

click me!