தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக தனக்கு பிறந்தநாள் என்றால், அதை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது விஜயகாந்த்தின் வழக்கம். சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே, பலருக்கும் உதவியவர் விஜயகாந்த். கண்ணுக்கு தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில், கூடுதல் நலத்திட்டங்களை வழங்குவது விஜயகாந்த்தின் இயல்பு ஆகும். உடல்நல குறைவு காரணமாக சமீபத்திய வருடங்களாக ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கப்போகிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..