இதுக்காகத்தான் தமிழ்நாடே காத்துகிட்டு இருந்துச்சு.. செம குட் நியூஸ்.. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published May 14, 2020, 7:21 PM IST
Highlights

தமிழ்நாட்டில் மீண்டும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஆரம்பக்கட்டத்தில், டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது. அதன்பின்னர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தப்லிஹி ஜமாத்தை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி மோசமான சிங்கிள் சோர்ஸாக உருவெடுத்தது கோயம்பேடு சந்தை. 

கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து, சொந்த ஊர் திரும்பியவர்களில் நிறைய பேருக்கு தொற்று உறுதியானதால், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு தாறுமாறாக எகிறியது. அதனால் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக, தினமும் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு 9674ஆக அதிகரித்துள்ளது. இந்த 447 பேரில் 363 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களின் பாதிப்பு எண்ணிக்கை 100க்கு குறைவாக உள்ளது. 

இன்று 21 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை. தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களிலும், திருவள்ளூரை தவிர மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் தான். குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதிப்பு தாறுமாறாக அதிகரித்த அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு பாதிப்பு கூட இல்லை.

அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களிலும் இன்று ஒருவருக்குக் கூட தொற்று இல்லை.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் குணமடைந்துவிட்ட நிலையில், கடந்த 23 நாட்களாக சிவகங்கையில் புதிய தொற்றே இல்லாமல் இருந்த நிலையில், மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டதுடன், அந்த மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிதாக ஒரு தொற்று கூட உறுதியாகவில்லை.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பது, மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலுர் - 348

செங்கல்பட்டு - 430

சென்னை - 5637

கோவை - 146

கடலூர் - 413

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 112

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 61

காஞ்சிபுரம் - 164

கன்னியாகுமரி - 31

கரூர் - 56

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 132

நாகப்பட்டினம் - 47

நாமக்கல்  - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 137

புதுக்கோட்டை - 6

ராமநாதபுரம் - 31

ராணிப்பேட்டை - 76

சேலம்  - 35

சிவகங்கை - 13

தென்காசி - 54

தஞ்சாவூர் - 70

தேனி - 72

திருப்பத்தூர் - 28

திருவள்ளூர் - 495

திருவண்ணாமலை - 136

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 38

திருநெல்வேலி - 114

திருப்பூர் - 114

திருச்சி - 67

வேலூர் - 34

விழுப்புரம் - 306

விருதுநகர் - 44.
 

click me!