தமிழகத்தில் தடை உத்தரவு... சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் குவிந்த கூட்டம்.. தவிடுபொடியாகும் நோக்கம்!

By Asianet TamilFirst Published Mar 23, 2020, 10:38 PM IST
Highlights

முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதியில் உள்ளனர். ஒரே சமயத்தில் கூட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளதால், திரும்பும் பக்கமெல்லாம் கூட்டமாக உள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டதால், பேருந்து சேவையை நம்பி மக்கள் குவிந்துவருகிறார்கள். 

கொரோனா பீதி காரணமாக தடை உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கட்டுள்ளதால், சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனவே, ஒரு வார காலத்துக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்க உள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஹோட்டல்கள், மருந்தகங்கள் ஆகியவை இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் வெளியூரிலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர், 144 உத்தரவால் கிடைத்துள்ள விடுமுறையைச் சொந்த ஊருக்கு சென்று கழிக்க முடிவு செய்துள்ளதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று மதியம் முதலே கூட்டம் அலைமோதுகிறது.


ஆனால், முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதியில் உள்ளனர். ஒரே சமயத்தில் கூட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளதால், திரும்பும் பக்கமெல்லாம் கூட்டமாக உள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டதால், பேருந்து சேவையை நம்பி மக்கள் குவிந்துவருகிறார்கள். ஆனால், ஊருக்கு செல்ல முடியாத அளவுக்குக் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் சாலையில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 
கூட்டம் சேரக் கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவு நாளை முதல் பிறப்பிக்கப்பட உள்ளது. ஆனால், தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. சமூக தள்ளிவைப்புக்கு மாறாக, கோயம்பேட்டில் கூட்டம் அலைமோதுவதால், நோக்கம் சீர்குலைந்துள்ளது.

click me!